சந்தேக நபரை துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை இன்று

26 Nov, 2023 | 03:59 PM
image

ந்தேக நபரை துரத்திச் சென்றபோது காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர்.

இறுதிக் கிரியையின்போது, மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்துகொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும் என மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார்.

மேலும், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டனர்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் இன்று பகல் தகனம் செய்யப்படவுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22