அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை, எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ; பரவிப்பாஞ்சான் மக்கள்

Published By: Priyatharshan

24 Feb, 2017 | 03:09 PM
image

பல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில்  கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான்  பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த திங்கள் முதல் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினையடுத்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதோடு மக்களும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

2008 ஆம் ஆண்டுக்கு  பின்னர் இன்று முதல் தடவையாக தங்களின் வீடுகளுக்குச் சென்று  துப்ரபுவு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த பிரதேசங்களில் இருந்து படையினரும் படிப்படியாக வெளியேறிவருகின்றனர். குறித்த பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட வேலிகள் அகற்றப்பட்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.


இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பொதுமக்களின் காணிகள் உத்தியோகபூர்வமாக படையினரால் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளன.

பின்னர் பிரதேச செயலகம் ஊடாக காணிகள் உரிய மக்களிடம்கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு அரசியல்வாதிகள் , அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில்  கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43