என்ட்டி பயோட்டிக்: ஹீரோவா, வில்லனா?

25 Nov, 2023 | 04:33 PM
image

தலைவலியா...? என்ட்டி பயோட்டிக் எடுத்துக்கொள்ளுங்கள்.

வயிற்றுவலியா...? என்ட்டி பயோட்டிக் எடுத்துக்கொள்ளுங்கள்.

காய்ச்சலா...? என்ட்டி பயோட்டிக் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்படி, என்ட்டி பயோட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டாலே போதும், வைத்தியரிடம் போகவேண்டிய தேவை இல்லை என்ற அளவுக்குத்தான் நம் மக்களின் (மூட)நம்பிக்கை இருக்கிறது.

என்ட்டி பயோட்டிக் என்றால் வைரஸ்கள், பக்டீரியாக்களின் - அதாவது, நுண்ணுயிரிகளின் - தாக்கத்துக்கு எதிர்விளைவை ஏற்படுத்துவது என்று அர்த்தம். நமக்கு காய்ச்சலோ, தடிமனோ, தலைவலியோ ஏற்பட்டுவது பக்டீரியாக்களின் தாக்கத்தினால் என்ற அரைகுறை உண்மையை நம்பி, உடனேயே ஒரு பனடோலையோ, பரசிட்டமோலையோ, டிஸ்பிரினையோ எடுத்துக்கொள்கிறோம். ஆனால், மேற்படி மருந்துகளை வைத்தியர் அறிவுரையின்றி கண்மூடித்தனமாக நாம் எடுத்துக்கொள்ளும் என்ட்டி பயோட்டிக் மருந்துகள், தேவையற்ற பக்கவிளைவுகளை நம் உடலில் ஏற்படுத்திவிடும் என்பதே வைத்தியர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது.

உண்மையில் வைரஸ்களும் பக்டீரியாக்களும் கோடிக்கணக்கில் நம் உடலினுள் வாழ்கின்றன. மேலும் அவற்றில் சில, மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன. ஆகவே, வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்கள் என்பன மனிதனுக்கு ஒவ்வாதவை, ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்ற தவறான எண்ணத்தினாலேயே மக்கள் பெருமளவில் இந்த என்ட்டி பயோட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு எதற்கெடுத்தாலும் என்ட்டி பயோட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதனால், நமது உடலில் வாழும், நமக்கு நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் வைரஸ்களும் கூட பாதிக்கப்படும், அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதனால்தான், மிக மிக அவசியமாகத் தேவைப்பட்டால் அன்றி, என்ட்டி பயோட்டிக் மருந்துகளை வைத்தியர்கள் பரிந்துரைப்பதில்லை.

தொடர்ச்சியாக என்ட்டி பயோட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதால், நம் உடலினுள் வாழும் பக்டீரியாக்கள், மேற்படி மருந்துகளை எதிர்க்கும் பண்பையும் வளர்த்துக்கொள்வதுதான் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதில் உள்ள அதி அபாயமான அம்சம்.

அதாவது, தொடர்ச்சியாக என்ட்டி பயோட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதால், நம் உடலினுள் வாழும் பக்டீரியாக்கள், அவற்றை எதிர்க்கும் வல்லமை பெற்றுவிடுகின்றன. இதனால், தேவையான நேரத்தில் கொடுக்கப்படும் என்ட்டி பயோட்டிக் மருந்துகள் கூட, பயனற்றுப் போய்விடுகின்றன. இதனால், உயிராபத்து வரை ஏற்பட இடமுண்டு. இதற்கு மிகச் சமீபத்திய உதாரணமாக அமெரிக்காவைக் காட்டலாம்.

அமெரிக்கர்கள் அளவுக்கதிகமாகவும் தேவையின்றியும் என்ட்டி பயோட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு சத்திர சிகிச்சைகள் ஏதும் செய்ய நேர்ந்தால், அதன் பின் அளிக்கப்படும் என்ட்டி பயோட்டிக் மருந்துகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இதனால், சத்திர சிகிச்சை செய்துகொண்டவர்  குணமடைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வது அல்லது குணமடையாமலேயே போய்விடுவது போன்ற சந்தர்ப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இந்த நிலை நம் நாட்டிலும் நமக்கும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்றால், சுய மருத்துவம் செய்துகொள்வதையும் எடுத்ததற்கெல்லாம் என்ட்டி பயோட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56