வடக்கு, கிழக்கு மாவீரர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல்களுக்கான தயார்படுத்தல் நிறைவு

25 Nov, 2023 | 08:22 PM
image

ஆர்.ராம்

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதற்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் துப்புரவுப்பணிகள் நிறைவடைந்து நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இதனைவிடவும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக கடந்த 21ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், வடமராட்சி- நெல்லியடி மாலி சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக, மாவீரர் நினைவாலயம் பொதுமக்கள் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு பெருமளவானவர்கள் மாலையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதி நாள் அஞ்சலிக்கான விசேட ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. 

இதேநேரம், மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைவிடவும், கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் விசேட நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  மேலும், திருகோணமலை ஆலங்குளத்தில் மாவீரர் நினைவேந்தலைச் செய்வதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33