ஜனாதிபதி தலைமையில் பொருளாதார ரீதியாக ஸ்திரமடைந்து வருகின்றமை சாதனையாகும் - எரிக்சொல்ஹெய்ம்

25 Nov, 2023 | 09:15 PM
image

 ஆர்.ராம்-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரமடைந்து வருகின்றமையானது சாதனையாகும்.

அந்த நிலைமையானது நீண்ட கால அடிப்படையிலான பொருளாதார ஸ்திரத்தன்மையை தோற்றுவிப்பதற்கான ஆரம்பமாகும் என்று சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் வீரகேசரியிடம் தெரிவித்தார். 

அத்துடன், அடுத்த ஆண்டு ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதோடு அத்தேர்தல்களை நெருக்கமாக பின்தொடரவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வடக்குக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் வீரகேசரிக்கு பிரத்தியேகமாக சமகால நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்போது, அவர் தெரிவித்த கருத்துக்கள்  வருமாறு,

கேள்வி:- நாட்டின் பொருளாதார விவகாரங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:- இலங்கை  மக்கள் அனுபவித்த வேதனைகள் அதிகமாக உள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகமாக காணப்படுகிறது. பலர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக போராடுகிறார்கள். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பலரின் வலியை நான் உணர்கிறேன்.

அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது. அது ஒரு பெரிய சாதனையாகும். மின்சாரத்தடை நீண்ட நேரமாக காணப்பட்டதோடு, எரிபொருள், எரிவாயு ஆகியவற்றை பெறுவதற்காக நீண்ட வரிசைகள் கடந்த காலத்தில் காணப்பட்டது. 

தற்போது அந்த நிலைமைகள்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இலங்கையர்கள் முன்னோக்கிப் பயணிப்பதற்கு ஆரம்பித்துள்ளார்கள். இந்த ஆரம்பமானது நீண்ட கால அடிப்படையிலான பொருளாதார ஸ்திரத்தன்மையை தோற்றுவிப்பதற்கான ஆரம்பமாகும்.

கேள்வி:- தேர்தல்கள் நடத்தப்படாமை தொடர்பில் காணப்படுகின்ற விமர்சனங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- நான் வெளிநாட்டு பிரஜை என்ற முறையில் இலங்கையின் தேர்தல்கள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் 2024ஆம் ஆண்டு நிச்சயமாக ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும். ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்றேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதனை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே அந்தச் செயற்பாடுகளை நான் நெருக்கமாகப் பின்தொடர்வேன்.

கேள்வி:- வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அவர்களுக்கு, அரசியல், பொருளாதார, சமூக ரீதியான தேவைப்பாடுகள் பல காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். நான் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளேன். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எனக்கான அழைப்பினை விடுத்துள்ளார். ஆகவே அடுத்த விஜயத்தின்போது நேரடியான விஜயம் நடைபெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00