நுவரெலியாவில் அதியுச்ச தொழில்நுட்பத்துடன்கூடிய விளையாட்டு பயிற்சிக்கூடக் கட்டடத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

நுவரெலியாவில் 34.5 ஹெக்டேயர் பரப்பளவிலேயே இந்த அதி உச்ச தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான வர்த்தக உடன்படிக்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸ் நிறுவனமான 'எலிப்ஸ் புரஜக்ட் எஸ்.ஏ.எஸ்.' உடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கூடம் சர்வதேச தரத்திலான ஓடுபாதைகள் மற்றும் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்தோடு இலங்கை வீரர்கள் தரம்மிக்க பயிற்சிக்கூடங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லத் தேவையில்லையென்றும், இதன்மூலம் இலங்கையின் விளையாட்டுத்துறையும் மேம்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு இதன் மொத்த செலவு 8500 மில்லியன் அமெரிக்க டொலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சிக்கூடங்கள் இதுவரையில் சீனா மற்றும் ஜப்பானில் மட்டுமே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.