அமரர் வ. சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் 'யார் எவர்' நூல் வெளியீடும் - ஒரு பார்வை

Published By: Nanthini

25 Nov, 2023 | 03:18 PM
image

மரர் வ. சிவஜோதியின் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு 'யார் எவர்' என்ற நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை மணிக்கு திருநகர், கனகராசா வீதியிலுள்ள லிற்றில் எய்ட் கல்வி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான சி. கருணாகரனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.  

நிகழ்வின் முதல் அம்சமாக அமரர் சிவஜோதியின் தந்தை சி. வயித்தீஸ்வரன்  நினைவுச்சுடர் ஏற்றினார். 

அதையடுத்து, காவேரி கலாமன்றத்தின் இயக்குநர் வண பிதா சி.யோசுவா, கிளிநொச்சி ஜெயந்தி நகர் மீனாட்சி அம்மன் ஆலய பிரதம குரு முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். 

அதன் பின்னர், தலைமையுரை ஆற்றிய சி. கருணாகரன், "ஜோதி வாழும் காலத்திலே நாம் அவரை புரிந்துகொள்ள தவறிவிட்டோம். அவரை போல வேறு எந்த ஆளுமைகளும் இறக்கும் வரை நாம் காத்திருக்காது ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே நாம் கொண்டாட வேண்டும்" என தெரிவித்தார்.    

அதை தொடர்ந்து, கலாநிதி ந.இரவீந்திரன் 'சிவஜோதி எனும் ஆளுமை' எனும் தலைப்பில்  நினைவுப் பேருரை வழங்குகையில், 

"இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் குழந்தைகளின் இறப்புக்களை கூட நம் வீடுகளில் கூட நடைபெற்றதை போல கவலைப்படுகின்றோம். இதற்கு காரணம் ஊடகங்கள் தான். இன்று ஜனநாயகத்தின் வழியாக மக்கள் யுகம் வளர்ந்துள்ளது. இந்த ஜனநாயகத்தை தாங்கும் தூண் ஊடகமாகும். இன்று ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் இயங்குகின்றனவா என்றால் கேள்விக்குரியது" என ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். 

அவரை தொடர்ந்து, அமரர் சிவஜோதியின் சகோதரர் வயித்தீஸ்வரன் சிவப்பிரகாஷ் தனது சகோதரனை பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

இதன்போது அவர், "என்னுடைய வாழ்க்கையில் புதிய மனிதர்களோடு பழகினாலும் கூட கதைகளில் வருவது போல சுலபமாக ஜோதியை கடந்து போக முடியாது. ஜோதி ஒரு போராளி. சிறு வயது முதலே சமூகத்தின் ஈர்ப்பை பெற்றவர் ஜோதி” என தெரிவித்தார். 

அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளருமான முருகேசு சந்திரகுமார் தனது உரையினூடாக கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலவரத்தை பற்றி விளக்கினார். 

"சிவஜோதி எனும் ஆளுமை மறைந்து 3 ஆண்டுகள் ஆனாலும் கூட அவர் ஆற்ற வேண்டிய சேவைகளை நாம் தொடர்கின்றோம் என்பது மகிழ்வாக உள்ளது. எங்கள் மத்தியில்  இன்னம் அதிக ஆளுமைகள் உருவாக வேண்டும். ஆளுமைப்பண்பு அனைவரிடமும் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் பத்து வீதம் கூட இல்லை. இந்த நிலையில் வடக்கு – கிழக்குக்கான அபிவிருத்தி எவ்வாறானதாக இருக்கும் என்பதே கேள்விக்குரியதாகிவிட்டது. 

மிகக்குறைவான சனத்தொகையை உடைய தமிழரிடத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவிட்டதும் ஒழுக்கமற்ற சமூககட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது" என அவர் இதன்போது குறிப்பிட்டார். 

அடுத்து இடம்பெற்ற நூல் வெளியீட்டில் 100 ஆளுமைகளை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய 'யார் எவர்' நூலின் முதல் பிரதியை சிவஜோதியின் தந்தை சி. வயித்தீஸ்வரன், மல்லாகம் பதில் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜாவுக்கு வழங்கிவைத்தார். 

அடுத்து, பிரியன் டிலக்சனா வெளியீட்டுரை ஆற்றினார். 

அதனை தொடர்ந்து, சிவஜோதி ஞாபகார்த்த விருதினையும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசினையும் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசனுக்கு சிவஜோதியின் குடும்பத்தினர் வழங்கி வைத்தனர். 

இதையடுத்து, லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகரான தம்பிராஜா ஜெயபாலன் காணொளியூடாக தனது வாழ்த்துச்செய்தியினை நிகழ்வின்போது பகிர்ந்துகொண்டார். 

பின்னர், விருது பெற்ற ஜெயலட்சுமி மாணிக்கவாசன் சிவஜோதி குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு நன்றி கூறியதோடு, தனது இலக்கு குறித்தும் தெரிவித்தார். 

"எமது பாடசாலை பழைய மாணவர்கள் பொருளாதார ரீதியில் இன்னமும் வலிமை பெற்றிராத நிலையில், இந்த தொகை எமக்கு பெரிதும் ஊக்கமானது. சிவஜோதி அவர்களுடன் பேசும்போது இணைய நூலகம் பற்றி அதிகம் பேசியிருக்கிறேன். அதனால், இணைய நூலகத்துக்காகவும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமையிட்டு பெருமகிழ்வடைகிறேன்" என குறிப்பிட்டார். 

நிகழ்வின் மற்றுமொரு விருது வழங்கல் அம்சமாக, அண்மையில் மறைந்த லண்டன் நாடக நடிகர் ரமேஷ் வேதாவுக்கான “நகைச்சுவை தென்றல்” விருது சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமாரால் வழங்கப்பட்டது. 

மேலும், இந்த நிகழ்வில் வேணுகானசபா இசை நாடக மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகம் நிகழ்த்தப்பட்டது. 

பின்னர், இறுதி நிகழ்வாக, லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும் அமரர் சிவஜோதியின் துணைவியுமான ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47