விஜய் சேதுபதியின் மகனின் புது அவதாரம்

25 Nov, 2023 | 01:06 PM
image

தமிழ் திரையுலகில் மற்றொரு வாரிசு நடிகர் உருவாகிறார். அது, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதிதான்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, ஏற்கனவே தனது தந்தையுடன் ‘நானும் ரௌடிதான்’ மற்றும் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், சிந்துபாத் படத்தில், தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, ‘பீனிக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தில், கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்தின் மூலம் சூர்யா கதாநாயகனாக அவதாரம் எடுப்பது போலவே, பல தசாப்தங்களாக இந்திய திரையுலகில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனல் அரசு, இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். ஆக மொத்தத்தில், சூர்யா சேதுபதி, அனல் அரசு - இரண்டு பேருக்கும் இது முக்கியமானதொரு ஆரம்பம்.

இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right