(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்கு இலங்கையர்களை அனுப்பும் விடயத்தில் இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம். இன,மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற அமர்வின் போது இலங்கையிலிருந்து 10000 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளமை தொடர்பில் விசேட கூற்றை முன்வத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின்படி நாம் ஒரு அணிசேரா நாடு. இஸ்ரேல்-காசா யுத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். இதற்காக ஐ.நா.வில் கூட நாம் குரல்கொடுத்துள்ளோம்.
இலங்கையிலிருந்து அரேபிய நாடுகளுக்கு பலர் வேலை வாய்ப்புகளுக்கு செல்கின்றனர். அதேவேளை ஏதாவது ஒரு நாடு எம்மிடம் தமது நாட்டுக்கான தொழிலாளர்களை கேட்கும்போது நாம் இன ,மத ரீதியாக செயற்பட முடியாது.
இஸ்ரேல் - காசா யுத்தம் ஆரம்பித்த போது தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தொழிலாளர்களை அங்கு அனுப்புவதை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தோம்.
தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்படட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.
எனவே இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பக்கூடாது இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் இன,மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM