ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

25 Nov, 2023 | 12:16 PM
image

பாகிஸ்தான் கிரிககெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

34 வயதான இமாத் வாசிம், இறுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இமாத் வாசிம், 2015ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக இருபதுக்கு 20 போட்டியில் அறிமுகமானார். 

பின்னர் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்தார்.

பல ஆண்டுகளாக, 50 மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான சகலதுறை ஆட்டக்காரராக வலம் வந்தார். 

2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் சில ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.

அதன்பின் அண்மைக்காலமாக அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் போராடினார். இந்நிலையில், தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் லீக் தொடர்களில் விளையாடவுள்ளார்.

தனது ஓய்வு குறித்து இமாம் வாசிம் கூறுகையில்,

"என்னை எப்போதும் ஆதரித்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி. நான் சாதிக்க உதவிய எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள். சர்வதேச அரங்கில் இருந்து விலகி எனது விளையாட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்த நான் இப்போது காத்திருக்கிறேன்"என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்