கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்த முயன்ற சந்தேக நபர் ஒருவரை சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரிடமிருந்து  400 கிராம் எடையுடை 32 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.