ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்த பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன்

24 Nov, 2023 | 05:48 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

13 வயதுக்குட்பட்ட (ஏ) டிவிஷன் -2 கிரிக்கெட் தொடர் - 2023இன் கொழும்பு - 04 பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும், பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திரா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. 

இதில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணி 28 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருந்ததுடன், முதல் இன்னிங்ஸ் வெற்றியை பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி ஈட்டியது. 

இப்‍போட்டியில் அபாரமாக பந்து வீசிய செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி 9 ஓட்டமற்ற ஓவர்களுடன் ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல், 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். 

ஏனைய இரு விக்கெட்டுக்களையும் வீ. அபினாஷ், ரவிராஜா தக்சேஷ் ஆகிய இருவரும் வீழ்த்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்