நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னாரா விஜய் ?

24 Nov, 2023 | 05:21 PM
image

லியோ தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் மகன் திருமண விழாவில் நடிகர் விஜய் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அத்துடன், இயக்குநர் அட்லீ மனைவி பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த லியோ திரைப்படத்தை லலித்குமார் தயாரித்திருந்தார்.

அவரின் மகன் விஷ்ணு திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனி, சதிஷ்,  கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right