மீண்டும் தள்ளிப்போனது துருவ நட்சத்திரம் திரைப்படம்!

24 Nov, 2023 | 05:20 PM
image

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  

இந்த படம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில், இப்படம் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெளதம் வாசுதேவ் மேனன் கொடுக்கவேண்டிய ரூ.2.40 கோடியை செலுத்தாதால் திட்டமிட்டபடி இன்று ‘துருவ நட்சத்திரம்’ படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://x.com/menongautham/status/1727801454516396322?s=20

or

https://twitter.com/menongautham/status/1727801454516396322/photo/1

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியன்று படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right