'துருவ நட்சத்திரம்' இன்றும் வெளியாகாத சோகத்தில் இயக்குநர் கெளதம் 

24 Nov, 2023 | 05:19 PM
image

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதை பட இயக்குநர் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். 

5 ஆண்டுகளாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த இந்த படம் நவம்பர் 24ஆம் திகதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படத்தின் இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன் கொடுக்க வேண்டிய 2.40 கோடி ரூபாய் பணத்தை கொடுக்காததால் படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. 

இது தொடர்பில் இயக்குநர் கூறுகையில், 

"மன்னிச்சிருங்க... துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட முடியவில்லை. எங்களால் முயன்ற முயற்சிகளை செய்தோம். ஆனால், இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது.

இந்த படத்துக்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. அதுவே எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் படத்தை வெளியிட்டுவிடுவோம்..." என்றார். 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right