வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கி இளைஞன் மரணம் : நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Published By: Digital Desk 3

25 Nov, 2023 | 12:22 PM
image

(எம்.நியூட்டன்)

வட்டுக்கோட்டை, சித்தங்கேணி இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பொலிஸாரைக் கைதுசெய்யுமாறும், பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே அடையாளம் காட்டுவதாயின் இரண்டு சட்டத்தரணிகளுடனேயே கூட்டிச் செல்லவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை  வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இறந்தவர்களின் நலன்களை கவனத்தில் எடுப்பதற்காக 50 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் இன்றைய தினம் சாட்சியமளித்த ஐந்து சாட்சிகளில் மூன்றாவது சாட்சியாக சாட்சியளித்த இறந்தவருடன் சமகாலத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாக கூறியிருப்பதன் அடிப்படையில் அவரின் சாட்சியத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட இரண்டு பொலிஸ் அலுவலர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு யாழ். பிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

மேலும்,  தன்னை பொலிஸ் நிலையத்திற்கு வெளியிலே சிலஇடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று அந்தஇடங்களை அடையாளம் காண்பதற்கும் விஞ்ஞான பூர்வமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்குமான கட்டளையாக்குவதற்கும் யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் இவ்விதம் அழைத்துச் செல்லப்படுகின்ற பொழுது அவருடைய நலன்களை கவனிப்பதற்கு எங்களால் பெயர் குறப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகள் அவருடன் கூடசெல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதைவிட குறித்த சாட்சியினால் அங்க அடையாளங்கள் விபரமாகக் குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அவர்களை அடையாளம் கண்டு பெயர் விபரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கட்டளையாகியுள்ளது.

மேலும், இன்றையதினம் சாட்சிக்கூண்டுக்கு வந்து சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தன்னுடைய சாட்சியத்தில் இறந்தவருடைய காயங்களை விபரித்ததுடன் காயங்கள் தொடர்பாக தன்னுடைய அபிப்பிராயத்தையும் காயங்களின் விளைவாகத்தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவ்விதம் மரணம் ஏற்பட்டதற்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே பிரதான காரணமாக இருந்தது எனக்கூறியதன் அடிப்படையில் இது மனித உயிர் போக்கல் அல்லது மனித ஆட்கொலை என்ற  அபிப்பிராயத்தைக் கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது ஏன நீதிமன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இரண்டு பொலிஸ் அலுவலர்களும் கடந்த காலங்களில் சில வழக்குகளில் நடந்தது போல இன்றை மரண விசாரணையின் பின்னணியில் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்கின்ற அச்சத்தை சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியதன் காரணமாக அவர்களுக்கு பயணத்தடை வழங்குமாறு எங்களால் கூறப்பட்டபோதிலும் அதனை வழங்காது அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாத வகையில் பொலிஸ்துறை நடைமுறைப்படுத்தமுடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதற்கான உத்தரவாதத்தை குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வழங்கியுள்ளார். 

மேலும், தாங்கள் மேற்கொண்டிருக்கின்ற உள்ளக விசாரணைகளில் நான்கு பொலிஸ் அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸ் தரப்பினர் கூறியதுடன், சாட்சியத்தின் அடிப்படையில் இன்னும் ஒரு பொலிஸ் அலுவலரின் அங்க அடையாளங்கள் சாட்சி கூறியதன் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நீதிமன்று உரிய கட்டளைகளை வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மரண விசாரணை எங்களுடைய விண்ணப்பத்தின் பெயரில் தொடர்ந்து நடைபெறுவதற்காக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் ஐம்பதுக்கும் மேற்பட்டசட்டத்தரணிகள் சமுகமளித்து தங்களது சமூகக் கடமையாற்றியிருக்கிறார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி...

2024-09-17 13:51:00
news-image

17 இலட்சம் பெறுமதியுடைய 220 கிராம்...

2024-09-17 13:37:36
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-17 13:42:02
news-image

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு...

2024-09-17 13:43:21
news-image

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள்...

2024-09-17 13:56:02
news-image

கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற...

2024-09-17 12:12:50
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது பசையை கொட்டிவிட்டு...

2024-09-17 12:45:25
news-image

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால்...

2024-09-17 12:07:43
news-image

வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்...

2024-09-17 13:36:44
news-image

ஜனாதிபதி தேர்தல் ; சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட...

2024-09-17 12:07:12
news-image

200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணிகளில்...

2024-09-17 12:46:10
news-image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 17,140,354...

2024-09-17 11:19:22