அமெ­ரிக்க பாடசாலைகளில் திரு­நங்கை மாண­வர்கள் பாலின விருப்­பப்­படி கழிப்­­றை­களை உப­யோ­கிக்­கலாம் என்ற முந்­தைய ஜனா­தி­பதி ஒபாமா அரசின் உத்­­ரவை ட்ரம்ப் அரசு இரத்து செய்­துள்­­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

ட்ரம்பின் இந்த புதிய உத்­­ரவு அமெ­ரிக்க திரு­நங்கை சமு­தா­யத்தில் பெரும் கொந்­­ளிப்பை ஏற்­­டுத்­தி­யுள்­ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ஒபாமா தலை­மை­யி­லான அரசு, அமெ­ரிக்க பாடசாலைகளில் திரு­நங்கை மாண­வர்கள் தங்­­ளது பாலின விருப்­பத்­துக்­கேற்ப கழிப்­­றை­களை உப­யோ­கிக்க அனு­­திக்­கு­மாறு பாடசாலை­ளுக்கு உத்­­ரவு பிறப்­பித்­தது.

இந்த நிலையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் திரு­நங்கை மாண­வர்­­ளுக்­காக ஒபாமா அரசு அறி­வித்­ இந்தத் திட்­டத்தை இரத்து செய்து உத்­­­விட்­டுள்ளார்.

இது தொடர்­பாக அமெ­ரிக்க பள்­ளி­­ளுக்கு, "ஒபா­மாவின் உத்­­ரவு குழப்­பத்தை ஏற்­­டுத்­து­­தா­கவும், தேவை­யற்ற ஒன்­றா­கவும் உள்­ளது" என்று அமெ­ரிக்க நீதித்­துறை, பள்ளித் துறை சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­­டுத்து திரு­நங்கை மாண­வர்கள் வெள்ளை மாளிகை முன்பு கூடி "வெறுப்பு இல்லை, பயம் இல்லை, திரு­நங்கை மாண­வர்கள் இங்கு வர­வேற்­கப்­­டு­கி­றார்கள்" என்று ட்ரம்ப்­புக்கு எதி­ராக முழக்­கங்கள் எழுப்­பினர். முன்­­தாக கடந்த ஜன­வரி மாதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பத­வி­யேற்­­தி­லி­ருந்து ட்ரம்ப் பல்­வேறு அதி­ரடி நட­­டிக்­கை­களை எடுத்து வரு­கிறார்.

மெக்­ஸிகோ எல்­லையில் சுவர், குடி­யு­ரிமை கொள்­கையில் மாற்றம், 7 முஸ்லிம் நாடு­களின் மீதான தடை போன்ற ட்ரம்ப்பின் நட­­டிக்­கை­­ளுக்கு உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் திருநங்கை மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ட்ரம்ப் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.