(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பு பேரவைக்கு இறுதி நியமனம் இதுவரை இடம்பெறாமை தொடர்பாக யாருக்கும் யாரையும் குற்றம் சுமத்த முடியாது.
அரசியலமைப்பின் பிரகாரமே எங்களுக்கு செயற்பட முடியும். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிப்பேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் எம்.பியின் பெயரை இதுவரை நியமிக்காமல் இருப்பது தொடர்பாக ஜனாதிபதி வியாக்கிழமை (23) சபையில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதற்கு அமையவே சபாநாயகர் இதனை சபைக்கு அறிவித்தார்.
இது தொடர்பாக சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு பேரவைக்கான இறுதி நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி எழுத்துமூலம் அறிவிப்பேன். அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நியமனத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும் என்றே சட்டமா அதிபரின் ஆலாேசனையும் இருந்தது. இதனை மீறி செயற்பட எங்களுக்கு சட்ட அதிகாரம் எதுவும் இல்லை.
அதனால் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால் அரசியலமைபில் இருக்கும் அந்த உறுப்புரையை மாற்ற வேண்டும்.
அதனால் அரசியலமைப்பு பேரவைக்கு இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டவரை இதுவரை நியமிக்கவில்லை என யாரையும் குற்றம் சுமத்த, எவருக்கும் முடியாது. அரசியலமைப்பில் இடம்பெற்ற குறைபாடு காரணமாகவே இந்த விடயம் இடம்பெறாமல் இருப்பதற்கு காரணமாகும்.
அத்துடன் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு சட்டத்திலும் எந்த தாமதமும் இல்லை. அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. சட்டத்தில் சிறிய திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கே சற்று தாமதம் இருந்தது. தற்போது அந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்துக்குள் இதற்னான நியமனங்கள் அனைத்தும் பூரணப்படுத்தப்படும்.
அத்துடன் இதற்கான நியமனங்களுக்கு நபர்களை தெரிவு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியமும் சில யோசனைகளை தெரிவித்திருக்கிறது. அதனால் இந்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி பாராளுமன்றத்துக்கு அந்த திருத்தங்களை முன்வைத்திருக்கிறோம். எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கும் இந்த . நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM