இலங்கையின் முன்னணி ஹொட்டேல் சங்கிலித் தொடர்களில் ஒன்றான ஏயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்கள் கடந்த மாதத்தில் அடுத்தடுத்துப் பெற்ற பாராட்டுதல்கள் மூலம் விருந்தோம்பல் தொழிற்றுறையில் ஒப்பற்ற தரச்சிறப்பிற்கான தனது அர்ப்பணிப்பை மீள வலியுறுத்தியுள்ளது.
இலங்கை, இந்தியா, ஓமான் மற்றும் மாலைதீவிலுள்ள எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் சொத்துகள் பல்வேறு மதிப்பார்ந்த தளங்களில் தனித்துவமான அனுபவங்களுக்காகவும் தரச்சிறப்பில் கொண்டுள்ள நிலையான அர்ப்பணிப்புக்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள. இதனால் அவை பயணம் மற்றும் பேண்தகு தன்மையான சுற்றுலாத் துறைகளில் தமது முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
புகழ்பெற்ற தெற்காசியப் பயணத்துறை விருதுகள் (ளுயுவுயு) 2023 நிகழ்வில் ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோட்ஸ் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. ஹெரிட்டன்ஸ் கந்தலம ஆசியாவிலுள்ள “முன்னணி சூழல்நல ரிசோட் என்ற விசேட விருதைப் பெற்றமை சூழல்நலப் பாதுகாப்பில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்.
மலையகத்திலுள்ள எமது ரீசோட்டான ஹெரிட்டன்ஸ் டீ தொழிற்சாலை அதன் தனித்துவமான தேயிலை அமைவிடக் கோட்பாட்டிற்காக “முன்னணி வடிவமைப்பு ஹொட்டேல்ஃரிசோட்” என்ற விருதை வென்றது. ஹெரிட்டன்ஸ் ஆயுர்வேதம் அதன் உண்மையான மற்றும் பூரணத்துவமான உடல்நல வசதிகளுக்காக “முன்னணி உடல்நல மற்றும் ஸ்பா ரிசோட்” என்ற விருதைப் பெற்றது.
நகரிலுள்ள ரிசோட்டான ஹெரிட்டன்ஸ் நீர்கொழும்புக்கு அதன் கடலோர சௌகரியம் மற்றும் அமைதிக்கான வாக்குறுதியை வலியுறுத்தும் வகையில் “முன்னணி ஆடம்பர ஹொட்டேல்ஃரிசோட்” என்ற விருது வழங்கப்பட்டது.
மாலைதீவிலுள்ள அடாரன் செலெக்ட் மீதுப்பாரு “முன்னணி டைவிங் ரிசோட்” விருதையும் எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் மோல்டிவ்ஸ் “முன்னணி ரிசோட்ஃஹொட்டேல் பிரான்ட்” விருதையும் பெற்றுக்கொண்டன. இதன் மூலம் இந்த ஹொட்டேல் மாலைதீவிள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உன்னதமான நன்மதிப்பைப் பிரதிபலிக்கின்றது.
துர்யா சென்னை “முன்னணிக் கூட்ட மற்றும் மாநாட்டு ஹொட்டேல்ஃரிசோட்” ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விசேட நிகழ்வுகள் மற்றும் வியாபார மாநாடுகளை நடத்துவதற்கு அது வழங்கும் அதிநவீன வசதிகள் மற்றும் சேவைகளுக்குக் கிடைத்த பாராட்டு இதுவாகும்.
மனதைக் கவரும் இந்த ளுயுவுயு விருதுகளுக்கு மேலதிகமாக, ஹெரிட்டன்ஸ் ஆரா ரிசோட், ஹொட்டேல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பெண்களுக்கு வலுவூட்டுவதில் காட்டும் அர்ப்பணிப்புக்காக ளுர்ந வுசயஎநட ஊடரடி புழடன விருது கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, ஹெரிட்டன்ஸ் வர்த்தகச் சின்னத்தின் முற்போக்கான கொள்கைகள் மற்றும் உள்ளடக்கும் தொழிற் சூழல் என்பவற்றிற்குக் கிடைத்த சான்றாகும்.
எழில்மிக்க அடாரன் செலெக்ட் மீதுப்பாரு ஊழனெé யேளவ வுசயஎநடடநச சுநயனநசள' ஊhழiஉந யுறயசன 2023 என்ற கௌரவ விருதையும் பெற்றுள்ளது. உலகின் மிக விவேகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ரிசோட்டை உலகின் தலைசிறந்த ரிசோட்களில் ஒன்றாகக் கருதுகின்றனர் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.
ஓமானிலுள்ள ஏயிற்கின் ஸ்பென்ஸ் ரிசோட்டான டெஸெர்ட் நைட் ரிசோட், ஆடம்பர வாழ்க்கை முறைக்கான விருதை அடுத்தடுத்த இரண்டாவது வருடமாக வென்றுள்ளது. காலத்தால் அழியாத இனிய நினைவுகள் மற்றும் அதியுன்னதமான சௌகரியங்களுடன் உண்மையான பாலைவன அனுபவத்தை அதிதிகளுக்கு வழங்கும் தனிச்சிறப்பிற்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல் ஹோல்டிங்ஸின் கூட்டுப் பிரதித் தவிசாளரும் கூட்டு முகாமைத்துவப் பணிப்பாளருமான ஸ்ட~hனி ஜயவர்தன கருத்து வெளியிடுகையில், “பேண்தகு தன்மை மற்றும் வடிவமைப்பு முதல் உடல்நலம், பாலின சமத்துவம் மற்றும் அதிதிகளுக்கான இணையற்ற அனுபவங்கள் வரை, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையின் பல்வேறு அம்சங்களிலும் ஏயிற்கின் ஸ்பென்ஸ் தொடர்ச்சியாகப் பேணுகின்ற உயர்ந்த தரச்சிறப்பையே இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன.
அதிதிகளுக்கு வெறுமனே தங்குமிட வசதியை மட்டுமல்லாமல் சௌகரியம், கலாசாரம் மற்றும் சூழல் பராமரிப்பு உள்ளடங்கிய இங்கிதமான சுற்றுலாப் பயண அனுபவத்தையும் வழங்குவதற்கு எயிற்கின் ஸ்பென்ஸ் குழுமம் கொண்டுள்ள புத்தாக்க மற்றும் தரச்சிறப்பு ஆற்றல் இந்த விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
ஏயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல் மனேஜ்மன்ற்ஸ் பிறைவேட் லிமிட்டட்டின் கூட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் சுஸித் ஜயவிக்கிரம அபிப்பிராயம் தெரிவிக்கையில், எமது முழு அணியினதும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன.
எயிற்கின் ஸ்பென்ஸிலுள்ள நாம் கைக்கொள்ளும் பிரான்ட் நெறிமுறைகள் யாவும் விருந்தோம்பலில் கூட்டான பேண்தகு தன்மை, பாரம்பரியம் மற்றும் தரச்சிறப்பை அடியொற்றியவையாக அமைகின்றன. இத் துறைகளில் எமது ஹொட்டேல்கள் மற்றும் ரிசோட்கள் செய்துள்ள பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளமை எமக்குக் கௌரவமாகும்.
இத்தகைய அங்கீகாரம், நாம் எமது அதிதிகளுக்கு அதிசிறந்த அனுபவங்களைத் தொடர்ந்து வழங்கவும் சூழல் பொறுப்புணர்வு மற்றும் கலாசாரப் பாதுகாப்பைப் பேணவும் உந்துசக்தியாக அமைகின்றன” என்று கூறினார்.
எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் பற்றி
எயிற்கின் ஸ்பென்ஸ் என்பது இலங்கையின் மாபெரும் கூட்டு நிறுவனங்களில் ஒன்றான எயிற்கின் ஸ்பெனடஸ் பி.எல்.சி.யிள் ஒரு பகுதியாகும். எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் அதற்குச் சொந்தமான 17 ஹொட்டேல்கள் மற்றும் ரிசோட்களை இலங்கை, மாலைதீவு, ஓமான், இந்தியா ஆகிய நாடுகளில் நடத்துகின்றது.
நிறுவனத்திற்குச் சொந்தமான ஹொட்டேல்கள் ஹெரிட்டன்ஸ், அடாரன், துர்யா ஆகிய வர்த்தகப் பெயர்களில் இயங்குகின்றன. அதிசிறந்த சேவை, இணையற்ற வசதிகள் மற்றும் தொகுக்கப்பட்ட வாழ்க்கைமுறை அனுபவங்களுக்காக அவை உலகெங்கும் பிரபல்யமாக விளங்குகின்றன. நிறுவனம் தனது இலங்கை வலையமைப்பில் எட்டு ஹொட்டேல்களையும் ரிசோட்களையும் கொண்டுள்ளன. அவற்றில் ஐந்து இடங்கள் ஹெரிட்டன்ஸ் வர்த்தகப் பெயரிலானவை.
மாலைதீவில் ஐந்து ரிசோட்களும் (அவற்றில் ஒன்று ஹெரிட்டன்ஸ் ரிசோட்) ஓமானில் மூன்று ரிசோட்களும் இந்தியாவில் ஒரு ரிசோட்டும் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM