மலையகத்துக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

Published By: Digital Desk 3

24 Nov, 2023 | 01:50 PM
image

நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

அதன்படி, ரயில் சேவை பதுளை வரை தொடரும் என இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில்  மண் மேடுகள் சரிந்து விழுந்தமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை போக்குவரத்து தடைபட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, நேற்று  22 ஆம் திகதி வரை பதுளைக்கான அனைத்து ரயில் சேவைகளும்  நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படுவதாக ரயில் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ரயில் மார்க்கம் சீர் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right