சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்காமல் இருப்பது ஏன் ? வெளிப்படுத்துமாறு சபாநாயகரிடம் சஜித் கோரிக்கை

24 Nov, 2023 | 01:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவ்வாறு செய்வதற்கு ஜனாதிபதிக்கு முடியுமா என்பதையும் அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனம் இடம்பெறாமல் இருப்பது தொடர்பாகவும்  சபைக்கு தெளிவு படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரை கேட்டக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  சபைக்கு வந்து அரசியலமைப்பு பேரவை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கூட்டிக்காட்டி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சபாநாயகர் நீங்களும் நானும்  சபையில் இல்லாத போது  சபைக்கு வந்த ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவை தொடர்பாக பல விடயங்களை முன்வைத்துள்ளார்.   குறிப்பாக அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனத்தை மேற்கொள்ளாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரை சாடி ஜனாதிபதி குற்றம் சாட்டினார் ,இந்நியமனம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது அரசியலமைப்பின் 41 (ஏ) உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சித்தார்த்தன் எம்.பி.யின் பெயரை பரிந்துரைத்துள்ளது. ,ஏன் இந்நியமனத்தை மேற்கொள்ளவில்லை என நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவியுள்ளேன். இறுதி நியமனம் தொடர்பான பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லை. 

அத்துடன் நாங்கள்  சபையில் இல்லாத போது அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பாக தேடிப்பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அவ்வாறு செயற்பட  அதிகாரம் இல்லை. 

நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களை ஓரளவிற்கு குறைக்கும் வகையில் தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்தவே அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டது. அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி பெயரிட்டு அனுப்பும் அனைத்துக்கும் ஆம் என தெரிவிக்க முடியாது. பொலிஸா் அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை தெளிவாக ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறோம். 

எனவே அரசியலமைப்பு பேரவைக்கான இறுதி நியமனம் தொடர்பில்  ஏற்பட்டுள்ள தாமத்துக்கான காரணம் என்ன என்பதை ஜனாதிபதிக்கு தெறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பாக நாட்டுக்கு தவறான தகவல் செல்லும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00