(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டின் நீர்வளத்தை பிற நாட்டுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
நீர்வளத்தை விற்பதற்கு பேச்சுவார்த்தைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை. நாட்டின் நீர் வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதே தவிர விற்பனை செய்வதற்கல்ல, என விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்'
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மின்விநியோக கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சூழ்நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றது.உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையிலான மோதல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மின்விநியோகத்துக்கான கேள்வி உயர்வடைந்தது.தற்போது இஸ்ரேல்- பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதலினால் மின்விநியோக கட்டமைப்பு மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
தடையின்றி மின்விநியோகம் மற்றும் எரிபொருள் சேவையை முன்னெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.டொலர் பற்றாக்குறையினால் நாட்டின் கடற்பரப்பில் எரிபொருள் கப்பல் நங்கூரமிட்டு இருந்ததை மறக்க கூடாது.தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.
எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் உயர்வடைந்துள்ளதால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.விலை உயர்வை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசும் தரப்பினர் விலையை குறைக்கும் போது அதனை சுட்டிக்காட்டுவதில்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடையும் போது அதன் பயன் நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்கப்படும்.
தற்போது அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதால் நீர் மின்னுற்பத்தி வீதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவும் என காலநிலை அவதானிப்பு மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.ஆகவே கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சியை முழுமையாக நீர்மின்னுற்பத்திக்கு மாத்திரம் பயன்படுத்த முடியாது.சமநிலைப்படுத்தலுடன் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டை செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.மின்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கடந்த காலங்களில் முன்னெடுத்த முதலீட்டு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.இதனால் தான் புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் தோல்வியடைந்தன.
நாட்டின் நீர்வளத்தை பிற நாட்டுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது.அதற்கான பேச்சுவார்த்தைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை.நாட்டின் நீர் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதே தவிர விற்பதற்கு உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM