தனுஸ்க விவகாரம் - அவுஸ்திரேலிய பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளனர் என நீதிபதி தெரிவிப்பு

24 Nov, 2023 | 12:20 PM
image

இலங்கை அணியின் கிரிக்கெட்வீரர் தனுஸ்ககுணதிலக பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்தினார்  என்ற குற்றச்சாட்டில் விசாரணைகளை மேற்கொண்டதன் மூலம்  அவுஸ்திரேலிய காவல்துறையினர் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டனர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் கண்டித்துள்ளது.

32 வயதான தனுஸ்ககுணதிலக செப்டம்பரில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு இலங்கை திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

சமூக ஊடகம் மூலம் தான் சந்தித்த பெண்ணுடன் உறவுகொண்டவேளை அவர் அந்த பெண்ணின் விருப்பமின்றி ஆணுறையை அகற்றினார் என பொலிஸார் குற்றம்சாட்டியிருந்தனர்.

குறித்த வழக்கு செலவு குறித்த விசாரணைகள் வெள்ளிக்கிழமை இடம்பெற்றவேளை வழக்கு விசாரணை குறித்து தான் ஆழ்ந்த கரிசனை கொண்டிருந்ததாக நீதிபதி சரா ஹகெர்ட் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சாட்சியங்கள் மற்றும் வழக்கு குறித்த உண்மைகள் அனைத்தும் வழக்கு தொடுத்தவர்களிடம் - பொலிஸாரிடம் இருந்திருந்தால் வழக்கு தாக்கல் செய்வது நியாயமானதாக இருந்திருக்காது என நான் கருதுகின்றேன் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்