சிறுவர்கள் மத்தியில் சுவாசநோய்களின் அதிகரிப்பு மற்றும் மர்ம நிமோனியா காய்ச்சல் குறித்து சீனாவிடமிருந்து விரிவான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
இம்மாதம் 13 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சீன தேசிய சுகாதார ஆணையக அதிகாரிகள் குறித்த நோய் அதிகரிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம், இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவித்துள்ளார்கள்.
சுகாதார வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட நோய் கண்காணிப்பு மற்றும் நோயாளிகளை நிர்வகிக்கும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தார்கள்.
இந்நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
இதேவேளை, குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா பரவுவதற்கு முன்பும் சரியாக 2019 டிசம்பரில் இந்த அமைப்பு புது நோய்ப் பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM