வெந்தயத்துக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும், வெந்தயத்தை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.
தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் ஒரே வாரத்தில் 2 கிலோ அல்லது 3 கிலோ வரை தொப்பை குறைய (belly fat) உதவுகிறது.
வெந்தயத்தை இரவு ஊற வைத்து, அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது. எனவே, உடல் சூடு குறைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை குடித்து வர உடல் சூடு குறைந்துவிடும்.
மேலும், வெந்தயத்தில் அதிகளவு அமினோ ஆசிட் இருப்பதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மேலும், வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை வராது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், இதில் நார்ச்சத்து, கல்சியம், இரும்புச்சத்து, கார்போவைதரேற்று, புரதம் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
வெந்தய டீ செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
இந்த தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், தொப்பை படிப்படியாக குறையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM