குளியலறை - கழிவறைகளில் உப்பு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? 

24 Nov, 2023 | 10:44 AM
image

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் ஒவ்வொரு பகுதியும் வீட்டில் உள்ளவர்களை பாதிக்கும் சில ஆற்றல்களைக் கொண்டுள்ளது. வாஸ்துவின் முக்கிய அங்கமாக குளியலறை - கழிவறையும் கருதப்படுகிறது. ஒரு சிறிய அழுக்கு கூட குளியலறையில் வாஸ்து தோஷங்களை உருவாக்குவதுடன் அதிலிருந்து உருவாகும் எதிர்மறை ஆற்றல் வீடு முழுவதும் பரவுகிறது.

நாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இடம் குளியலறை - கழிவறையாகும். இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண் கிருமிகள் (பக்டீரியாக்கள்) உள்ளன. எனவே, குளியலறை - கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை எப்போதும் தீய சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.  

ஒரு கண்ணாடிக் கிண்ணம் நிறைய கடல் உப்பை வீட்டின் குளியலறை - கழிவறைகளில் தென்மேற்கு மூலையில் வைப்பதன் மூலம் இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை அகற்றிவிடுகிறது. இவ்வாறு செய்வதால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். உப்பு ஈரமாகி சதுப்பாகிவிட்டால் அவ்வப்போது உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் குளியலறையில் உப்பு வைப்பது நல்லது என்று கருதப்படுகிறது. 

உப்பு நீரில் குளிப்பதும் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இதனால் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இது வளிமண்டலத்தை சுத்தப்படுத்தி லட்சுமி தேவியை அடைய வழிவகுக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெய்வ திருவுருவங்கள்

2024-02-05 17:10:36
news-image

பிரேக் அப் ஆன காதல் கைக்கூடுவதற்கான...

2024-02-04 10:15:13
news-image

2024 பெப்ரவரி மாத ராசி பலன்கள் 

2024-02-01 17:39:40
news-image

கருக்கலைப்பு செய்திருந்தால் அதற்கான பரிகாரம்...!?

2024-02-01 15:40:52
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் ஆலய பரிகாரம்

2024-02-01 15:35:37