யுத்த காலத்தின் போது 99.9 சதவீதமான படையினர் மிகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவுமே யுத்தம் செய்தனர். எமது படையினர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடவில்லை. எனினும் ஒரு சதவீதத்தினர் குற் றம் செய்திருக்கலாம். அவ்வாறானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபைகளைச் சேர்ந்த தமிழ் பிரதிநிதிகள் தெற்கு சிங்களவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இதனால் நல்லிணக்கப் பயண த்தை முன்னெடுத்துச் செல்வது கடினமா கும். எனினும் தமிழ் பாராளுமன்ற உறுப்பி னர்கள். நேர்மையாக செயற்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இலங்கை பொறியியல் பேரவை சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் இராணுவ வீரர்கள் யுத்தத்தை வெற்றி கொண்டமைக்காக அவர்கள் செய் யும் தவறுகளுக்காக அவர்களை கைது செய்யாமல் இருக்க முடியாது. குற்றம் இழைத்திருந்தால் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். இப்படி செயற்பட்டால் தான் நாடு என்ற வகையில் எம்மால் முன்னேற்றம் அடைய முடியும்.
ஊடகவியலாளர் கொலை சம்பந்தப்பட்ட மைக்காக இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றம் இழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். எனி னும் தப்பு செய்யா விட்டால் அது தொடர் பில் நாம் மீளாய்வு செய்ய முடியும். அத்து டன் ஓய்வூதிய இராணுவ வீரர்கள் சிறைச்சாலையில் இருக்கும் விதம் தொடர்பில் ஜனாதிபதியின் அவதானத்திற்கு கொண்டு வரு வோம்.
இராணுவ வீரர்களை வேட்டையாடு வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட் டோம். எமது இராணுவ வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடவில்லை. யுத்த காலத்தின் போது 99.9 சதவீதத்தினர் மிகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவுமே செயற்பட்டனர். எனினும் ஒரு சிலர் தப்பு செய்திருக்கலாம். ஆகவே தப்பு இழைத்தவர்கள் தண்டிக்க வேண்டும். அதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை.
சர்வதேச அளவில் இராணுவ வீரர்களுக்கு இருந்த அச்சத்தை நாம் அகற்றியுள்ளோம். முன்னைய காலங்களில் மார்ச் மாதம் ஐக் கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத்தொடர் வரும் போது இராணுவ வீரர்கள் பெரும் அச்சத்துடனே காணப்பட்டனர். ஆனால் அந்த சூழலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார்.
எனவே தற்போது நாட்டில் அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். யுத்தத்தினால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கு முறையின் பிரகாரம் இன நல்லிணக் கத்தை ஏற்படுத்தும விதமாக செயற்பட்டாலும் வடக்கு, கிழக்கு மாகாண சபை பிரதிநிதி கள் சிலரினால் தெரிவிக்கப்படும் கருத்து கள் சிங்கள மக்களின் மனங்களை புண்படச் செய்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளி னால் இன நல்லிணக்கத்தினை எதிர்பார்க்க முடியாது போகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM