உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வுகாண பேராயர் முன்வருவதில்லை : பொது மக்கள் பாதுகப்பு அமைச்சர் டிரான் அலஸ்

Published By: Digital Desk 3

24 Nov, 2023 | 12:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் 90 வீதம் நிறைவடைந்துள்ளன. அதனால் இந்த பிரச்சினைக்கு நாங்கள் அனைவரும் இணைந்து தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். என்றாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பேராயர் கர்தினால் முன்வருவதில்லை. மாறாக இதனை பயன்படுத்திக்கொண்டு அரச தலைவர்களுக்கு அழுதங்களை பிரயோகித்து வருகிறார். அதனால் உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு இன,மத பேதங்களை தூண்ட வேண்டாம் என பேராயரை கேட்டுக்கொள்கிறோம் என பொது மக்கள் பாதுகப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் 90 வீதம் நிறைவடைந்திருக்கிறது.  இதற்கு முன்னரும் இதனை நான் தெரிவித்தபோது பேராயர் கர்தினால் என்னை விமர்சித்தார். ஆனால் தற்போது நான் தெரிவிப்பது, விசாரணையில்  90 வீதம் நிறைவடைந்திருக்கிறது. ஏனெனில் இது தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் 42 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறன.  இதுதொடர்பான விசாரணைகளும் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை வழங்குமாறு கர்தினால் கேட்டிருந்தார். அதனை அவரிடம் கையளித்தோம். பின்னர் அதில் சில பாகங்கள் இல்லை என தெரிவித்தபோது, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அனைத்து பிரதிகளையும் வழங்கினோம். இதனை வழங்கியபோது ,இது தொடர்பாக எமது விசாரணை தொடர்பாக தெரிவிப்பதற்கு திகதி ஒன்றை நாங்கள் எழுத்து மூலம் அவரிடம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை எமக்கு அதற்கான நேரம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நாங்கள் வினவியபோதேல்லாம் விசாரணை அறிக்கையை இன்னும் பூரணமாக ஆராய்ந்து பார்க்கவில்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி இது தொடர்பாக ஏதாவது தெரிவித்தால் உடனடியாக ஜனாதிபதியை விமர்சித்து கடிதம் எழுதுகிறார்கள்.

அதனால்  இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு இன,மத பிரச்சினைகளை தூண்ட வேண்டாம் என்றே தெரிவிக்கிறோம். ஏனெனில் 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தபோது கண்டியில் அமைச்சரவை நியமனம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்ள நான் கண்டியில் இருந்தபோது என்னுடம் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டலஸ் அலகப்பெரு ஆகியோர் நிகழ்வுக்கு முன்னைய தினம் இரவு அறையில் தங்கி இருந்தபோது, அப்போதைய  ஜனாதிபதியிடமிருந்து உதய கம்மன்பிலவுக்கு தொலை பேசி அழைப்பொன்று வந்தது. அதனால் அலிசப்ரிக்கு அமைச்சுப்பதவி வழங்க வேண்டாம் என பேராயர் கர்தினால் தெரிவிக்கிறார். ஏனெனில் அவர் முஸ்லிம் என்பதாலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனால் இது தொடர்பில் ஏதாவது செய்யுங்கள் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருக்கையில் அலிசப்ரியும் தனக்கு நீதி அமைச்சு அல்லாமல் வேறு அமைச்சு பதவி வேண்டாம் என தெரிவித்தார். பின்னர்  சுமுகமாக இந்த பிரச்சினையை தீர்த்துக்கொண்டோம்.

எனவே இது தொடர்பில் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது. தேர்தல் வாக்குகளை எதிர்பார்த்துக்கொண்டு இந்த விடயத்தை பார்க்க வேண்டாம்.   அதனால் அனைவரும் ஒன்றுபட்டால் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண முடியும். இல்லாவிட்டால் இன்னும் 10 வருடங்களுக்கு இதனை இவ்வாறே தெரிவித்துக்கொண்டு செல்வார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29