தெலுங்கில் ரீ-ரிலீஸாகும் 'அயன்'!

24 Nov, 2023 | 10:15 AM
image

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த ப்ளொக் பஸ்டர் திரைப்படம் 'வாரணம் ஆயிரம்' சமீபத்தில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 

சுமார் 500 தியேட்டர்களில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்றனர்.

இதனையடுத்து, தற்போது சூர்யாவின் இன்னொரு அதிரடி அக்ஷன் திரைப்படமான 'அயன்' தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வாரணம் ஆயிரம்’ திரைப்படம் போலவே இந்த படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் சூர்யாவுடன் சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் இன்று வரை டொப் 5 திரைப்படங்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right