வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொலிஸாரை கடமையிலீடுபடுத்த நடவடிக்கை : நீதி அமைச்சர் 

24 Nov, 2023 | 09:36 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. என நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் மூலம் தமிழ் மொழியில் சேவையாற்ற கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்களுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23)  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய டளஸ் அழகப்பெரும எம். பி அது தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 டளஸ் அழகப்பெரும எம்.பி  தமது கேள்வியின் போது:

வடக்கு கிழக்கில் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தாய் மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாமல் பெரும் கஷ்டப்படுகின்றனர்.

தமது தாய் மொழியில் வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்வதற்கும் முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் சில வேளைகளில் இனப் பிரச்சினைக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன. இது அநீதியான ஒரு விடயமாகும்.

மக்கள் தமது தாய் மொழியில் முறைப்பாடுகளை அல்லது வாக்குமூலங்களை வழங்க முடியாத நிலை மிகவும் துரதிஷ்டமானது.

நாட்டில் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ள நிலையில் அவர்களின் ஒரு வீதமாவது இவ்வாறு தமிழ் மொழியில் செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் கிடையாது. அந்த வகையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் துறையில்  நியமித்துக் கொள்வது தொடர்பான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49