மிலிந்த மொறகொட ஊழல் ஒழிப்பு பற்றி பாடம் கற்பிக்கிறார் - நீதியமைச்சர் கடும் விசனம்

Published By: Vishnu

23 Nov, 2023 | 10:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச நிதியை மோசடி செய்தவர் என்று நீதிமன்றத்தால்  அடையாளப்படுத்தப்பட்ட மிலிந்த மொரகொட ஊழல் மோசடி தொடர்பில் தற்போது பாடம் கற்பிக்கிறார். இவ்வாறானவர்களின் கட்டுரைகளை வெளியிடும் ஊடகங்கள் கடந்த காலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது;

ஊழல் ஒழிப்பு தொடர்பில் மிலிந்த மொரகொட தேசிய பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இவரும்,பி.பி ஜயசுந்தரவும் ஒன்றிணைந்து செய்த முறைகேடுகளை 2007 ஆம் ஆண்டு நான் கோப் குழு ஊடாக வெளிப்படுத்தியுள்ளேன்.

125 பில்லியன் ரூபா பெறுமதியான ஸ்ரீ லங்கா காப்புறுதி நிறுவனத்தை  6 பில்லியன் ரூபாவுக்கு  தனியார் மயப்படுத்தியதை கோப் குழுவின் ஊடாக வெளிப்படுத்தினேன்.இந்த முறைகேடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய அரசாங்கத்திடம்  வலியுறுத்தினேன்.ஆனால் எவ்வித  நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.ஆனால் உயர்நீதிமன்றம் இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி 14 நாட்களுக்குள் காப்புறுதி நிறுவனத்தை மீண்டும் அரசுமடையாக்குமாறு தீர்ப்பளித்தது.

 அதனை தொடர்ந்து  கொழும்பு துறைமுக த்துக்கு சொந்தமான எட்டரை ஏக்கர் காணி  தனியாருக்கு விற்கப்பட்டது.இதனால் அரசுக்கு ஒரு சதம் கூட  கிடைக்கவில்லை என்று கோப் குழுவில் ஊடாக வெளிப்படுத்தினேன்.இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த முறைகேடுக்கு எதிராக தீர்ப்பளித்தது.

மிலிந்த மொரகொட அமைச்சராக பதவி வகிக்கும் போது இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றது.அதற்கு அவரது அமைச்சின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தர ஒத்துழைப்பு வழங்கினார்.இவர்களின் செயற்பாட்டை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளது.இவ்வாறான பின்னணியில் தான் இவர் தற்போது ஊழல் ஒழிப்பு தொடர்பில் கட்டுரை எழுதுகிறார்.

பல மோசடிகளுக்கு துணைபோன மிலிந்த மொரகொட உள்ளிட்டவர்கள் எழுதும் கட்டுரைகளை வெளியிட முன்னர் ஊடகங்கள் அவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும்.அல்லது அந்த கட்டுரைகளின் முடிவில் அவர்களின் கடந்த காலத்தை சுட்டிக்காட்ட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07