விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' திட்டமிட்டபடி வெளியாகுமா?

23 Nov, 2023 | 05:06 PM
image

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  

இப்படம் திட்டமிட்டபடி, நாளைய தினம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கௌதம் மேனன் உட்பட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right