உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோடன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து விழுந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உடப்பஸ்ஸலாவை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் புதன்கிழமை (22) புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும் மழையினால் கோடன் தோட்டப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு மேற் பகுதியில் உள்ள பாரிய மண்மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது மண்மேட்டில் இருந்து பாரிய கற்கள் குடியிறுப்பின் ஒரு பகுதி சுவர் மீது சரிந்து வீழ்ந்து குடியிருப்புக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் குடியிருப்பிலிருந்த தளபாடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் பௌத்த பிக்குகள் குடியிருப்பில் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அனர்த்தத்திற்கு உள்ளான குடியிறுப்பு சுவற்றை உடைத்து கொண்டு உட்புகுந்த பாரிய கற்களை அகற்றும் நடவடிக்கையில் கிராம வாசிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் இடியுடன் கூடிய கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்த நிலையில் பாரிய கற்பாறைகள், மண்மேடுகள்,மரங்கள் காணப்படும் பகுதிகள் மற்றும் நீரோடைகள்,ஆற்று பகுதிகள் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மண்சரிவுகள், பாறை சரிவுகள் மற்றும் நில வெடிப்புக்கள் காணப்படும் இடங்கள் காணப்பட்டால் இது குறித்து உடனடியாக மாவட்ட, பிரதேச செயலகத்தில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிக்க அப்பகுதி கிராம சேவை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM