மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விரர் மார்லன் சமூவல்ஸுக்கு 6 வருடத் தடை

Published By: Vishnu

23 Nov, 2023 | 01:18 PM
image

(என்.வீ.ஏ.)

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் செமுவல்ஸுக்கு சகல விதமான கிரிக்கெட்டிலிருந்தும் 6 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) ஊழல் தடுப்புச் சட்டத்தை அவர் மீறியுள்ளார் என்பது ஊழல் தடுப்பு விசாரணக் குழுவினால் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐசிசியினால் 2021 செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட செமுவல்ஸ், நான்கு குற்றங்களின் அடிப்படையில் விசாரணைக் குழுவினால் குற்றவாளி என இந்த வருடம் ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2.4.2, 2.4.3, 2.4.6, 2.4.7 ஆகிய விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டளைகளை செமுவல்ஸ் மீறியுள்ளமையும் விசாரணைகளின்போது உண்மைகளை வெளியிட மறுத்துள்ளமையும் நிரூபணமானதை அடுத்து அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்லன் செமுவல்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள போதிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டபோது   அவர் விளையாட்டு வீரராக இருந்துள்ளார் எனவும் இந்தத் தடையானது ஏனைய வீரர்கள் விதிகளை மீறாமலிருப்பதற்கு கடுமையான பாடமாக அமையும் எனவும் ஐசிசியின் மனிதவள மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்தார்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்