அபு அலா
பொத்துவில் ஆதார வைத்தியசாலை மிக விரைவில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நிர்வாகக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுலாத்துறைக்குப் பெயர்போன அருகம்பே பிரதேசம் இங்குள்ளதால் இந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் வெளிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அப்துல் றஹீம் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு புதிய நிர்வாகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், ஆளுநரின் அதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM