இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங்டாவோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.