நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஆபத்து!

23 Nov, 2023 | 10:20 AM
image

நீரிழிவு ஏற்படுவதற்கு முன், நீரிழிவு ஏற்படலாம் என்ற நிலை உருவாவதற்கு pre diabetic (ப்ரீ டயபட்டிக்) என்று பெயர். இந்த நிலையில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்துகொண்டால், நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தவிர்க்கவோ, குறைந்தபட்சம் தள்ளிப்போடவோ முடியும்.

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கொண்டே நீரிழிவு இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிவார்கள். இந்தப் பரிசோதனையின்போது, இரத்தத்தில் சீனி - அதாவது, குளுக்கோஸின் அளவு 100க்கும் குறைவாக இருந்தால், ஆரோக்கியமானவர் என்றும் 126க்கு மேல் இருந்தால், அவர் நீரிழிவு நோயாளி என்றும் அடையாளப்படுத்தலாம்.

ப்ரீ டயபட்டிக் - அதாவது, நீரிழிவு நோய் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் - பாதிக்கப்பட்டவர்கள் யார் என்றால், இந்த 100க்கும் 126க்கும் இடைப்பட்ட அளவில் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு உள்ளவர்களே.

நீரிழிவு எவ்வளவு ஆபத்தானதோ, அதேயளவு ஆபத்தானதே இந்த நீரிழிவு வாய்ப்பு நிலையில் இருப்பதுவும்! நீரிழிவுக்கு நிகரான பாதிப்புகளை இந்த நீரிழிவு வாய்ப்பு நிலையும் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

இந்த நிலையில், இருப்பவர்களுக்கும் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிலருக்கு மாரடைப்பும் கூட ஏற்படலாம். அதேபோலவே, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. சில வேளைகளில், கால்களுக்கான இரத்தப் போக்கு முற்றாக நின்று, கால்களை வெட்டியெடுக்கும் நிலையும் ஏற்படலாம். இவை அனைத்தும் நீரிழிவு ஏற்படுவதற்கு முன்னரே ஏற்படலாம் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க விடயம்.

அதேவேளை, நீரிழிவுக்கு முன்னான நிலையைக் கண்டறிந்துவிட்டால், உடனடியாக நீரிழிவு நிலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் போன்ற ஆசிய நாட்டவர்களின் முக்கிய உணவாக மாச்சத்து நிறைந்த உணவுகளே சோறு, பாண் போன்றன காணப்படுகின்றன என்பதால், உடனடியாக அவற்றைத் தவிர்த்து, புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், போதியளவு உடற்பயிற்சிகளை தினசரி தொடர்ந்து செய்து வருவதையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நீரிழிவுக்கு முந்தைய நிலையைக் கண்டுகொள்வதற்கு எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. இருந்தாலும், ஆண்கள் தங்களது வயிற்றின் சுற்றளவை அளந்து, அது 90 சென்டிமீற்றர்களுக்கு மேல் இருக்கும் என்றால் நீங்கள் நீரிழிவுக்கு முன்னான நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம். இதுவே பெண்கள் என்றால் 80 சென்டிமீற்றர்.

ஆண்களை விட பெண்கள் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாக நினைக்கிறார்கள். ஆனால், அவை பெண்களை நீரிழிவுப் பாதையில் இருந்து விலக்கிவிடாது. ஆண்களோ, பெண்களோ.... உடற்பயிற்சி செய்துதான் நீரிழிவைத் தவிர்க்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மேலும், நாட்டுச் சர்க்கரையை சாதாரண சீனி மற்றும் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். ஏனைய இனிப்பூட்டிகளுக்கும் நாட்டுச் சர்க்கரைக்கும் அவ்வளவு பெரிய வேறுபாடு இல்லை. எனவே, முற்றிலுமாக இனிப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதே நீரிழிவைத் தவிர்க்க உதவும்.

தொகுப்பு : கோபி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15