இந்து தர்மத்துக்கு மற்றொரு பெயர் – ஆரம்பப் பெயர் – 'சனாதன தர்மம்'. இது, வாழ்க்கையின் நியதிகளையும் விஞ்ஞான நியதிகளையும் கூட, சம்பிரதாயம் என்ற பெயரில் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆனால், காலத்தின் கோலம், இந்தச் சம்பிரதாயங்கள் கேலிப் பொருட்களாக மாறிவிட்டன. இதையே நாம் விதி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
விதி... நம்மில் பலரும் சம்பிரதாயங்களைப் பின்பற்றி, நியம முறையில் வாழ்க்கை நடத்தினாலும் கூட, கிரகங்களின் பாதிப்பினால், அவை ஆட்டுவிக்கும் ஆட்டத்துக்கு நாம் ஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக, திருமணம், உறவு போன்ற விடயங்களில்தான் மனிதன் தடுமாறுகிறான்.
முறை தவறிய உறவு – அதாவது, சகோதரி முறையிலான பெண்ணை மணப்பது, சித்தி ஸ்தானத்தில் இருக்கவேண்டிய பெண்ணை மணப்பது, தர்ம சாத்திர ரீதியாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற போக்கை அலட்சியம் செய்வது போன்றன கடும் பாவக்கறையை மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தி விடுகின்றன.
இவ்வாறான பாவ கர்மங்களில் ஈடுபட்டவர்கள், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருவியில் குளித்து முழுகி, மஞ்சள் தடவிய வெள்ளைத் துணியைத் தலையில் போட்டு தண்ணீரில் மூழ்கி எழ வேண்டும். அப்படி எழும்போதே அந்தத் துணியை தண்ணீரில் விட்டுவிட வேண்டும்.
பின்னர், அந்த அருவியில் உள்ள மீன் முதலான உயிரினங்களுக்கு அவல், பொரி என்பவற்றை அளித்த பின், பாபநாசம் கோவிலில் அருள் பாலிக்கும் உலகாம்பிகை அம்மனை தரிசித்தால், இதுபோன்ற பாவங்கள் போகும் என்று சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆலய தரிசனங்களுக்காக செல்பவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று புனித நீராடி வாருங்கள்... நல்லதே நடக்கும்!
- தொகுப்பு: ஜாம்பவான் சுவாமிகள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM