சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு லெல்லாமா பகுதியில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு பொலிஸார் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த எட்டு பேர் கடந்த 16 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு கதிரான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.