இரத்தம் சொட்டச்சொட்ட ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது பிரேசில் பொலிஸார் தடியடி

22 Nov, 2023 | 08:14 PM
image

(ஜே.ஜி.ஸ்டீபன்)

பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது.

இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரானது 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது. இதில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்நிலையில் போட்டித் தொடருக்கான ஒருபகுதி தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இதன் ஒரு போட்டியானது பிரேசிலில் இடம்பெற்றது. இதில் பிரேசில் மற்றும் ஆர்ஜன்ரீன அணிகள் மோதின.

இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக அரங்கில் நிறைந்திருந்த பிரேசில் மற்றும் ஆர்ஜன்ரீன ரசிகர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்ரீன ரசிகர்கள்மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டனர். தாக்குதலுக்கு இலக்கான ஆர்ஜன்ரீன ரசிகர்களின் தலைகளிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட பிரேசில் பொலிஸார் அவர்களை துரத்தித் துரத்தித் தாக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்ஜன்ரீன அணியின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினஸ் பிரேசில் பொலிஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன் ரசிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். எனினும் அந்த கோரிக்கையை பிரேசில் பொலிஸார் உள்வாங்கவில்லை.

இதனையடுத்து ஆர்ஜன்ரீன அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி, இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில் விளையாட முடியாது என்று கூறி தனது அணி வீரர்களை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றார். இதனால் ஆட்டம் சுமார் 25 நிமிடங்கள் தடைப்பட்டது. பின்னர் சுமுக நிலை ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆட்டம் ஆரம்பமானது.

இதன்போது அர்ஜன்ரீன அணி 1க்கு -0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17