பன்முக வியாபார தளங்களின் முன்னோடியான எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ் தனியார் லிமிட்டெட்டானது அதனது மதிப்புமிக்க சபைக்கு அஷான் செனவிரத்ன மற்றும் நேஷா செனவிரத்ன ஆகிய இரு இயங்காற்றல் மிக்க பணிப்பாளர்களது நியமனத்தை பெருமையுடன் அறிவிக்கின்றது.
23 ஆண்டுகளிற்கு முன்பு தாபிக்கப்பட்ட எஸ்எம்எஸ் ஹோல்டிங்சானது தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான செஹான் செனவிரத்னவின் தொலைநோக்கு மிக்க தலைமைத்துவத்தின் கீழ் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எய்தியுள்ளது.
அஷான் மற்றும் நேஷாவின் இணைப்பானது புத்தாக்கம் மற்றும் விரிவாக்கம் என்பவற்றில் புதிய அத்தியாயத்திற்கு தலைப்பட்டுள்ள கம்பனிக்கு அதிமுக்கிய கணமாக விளங்குகின்றது.
கிளைடோன் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் அதிசிறப்பு பட்டதாரியான, அஷான் செனவிரத்ன, தொழிநுட்பம், வியாபாரம் மற்றும் பொறியியலில் அதி நிபுணத்துவத்தை கொண்டிருக்கின்றார். டிபென்ஸ் அவுஸ்திரேலியா மற்றும் கொக-கோலா போன்ற நன்கறியப்பட்ட அமைப்புக்களிற்கான செயற்திட்டங்கள் உள்ளிட்ட கவனமீர்த்த சாதனைப் பதிவுகளோடு, அஷான் அவர்கள் அவுஸ்திரேலியாவின் ரோயல் சிறுவர் வைத்தியசாலையில் தகவல் தொழிநுட்ப முகாமையாளராகவும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது தொலைநோக்காவது இணைய விடயங்கள் (IoT), இயந்திர கற்றல், மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதனால் இலங்கையின் எண்ணிய பரப்பை புரட்சிக்குள்ளாக்குவதை உள்ளடக்கியுள்ளது.
கல்விக்கான அஷானது வேட்கையானது, -அரசாங்க துவக்கங்களை விரிவுபடுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்ததாக, இலங்கைப் பிராந்தியத்தில் கற்றலினை வளப்படுத்தும் துவக்கங்களை முன்கொண்டு செல்லும்.
சர்வதேச வியாபாரம் மற்றும் வியாபார முகாமைத்துவத்தின் அதிசிறப்பு பட்டதாரியான நேஷா செனவிரத்ன, இத்துறையின் பல தரங்களில் சடுதியான உயர்வையடைந்திருக்கின்றார். மாஸ்டர் பில்டர்ஸ் அவுஸ்திரேலியாவில் செயற்பாட்டுகுழுக்களை வழிநடாத்தும் அவரது அனுபவம் மூலோபாய அரசாங்கம் மற்றும் சர்வதேச உறவுகளிலான அவரது புத்திக்கூர்மையை பறைசாற்றுகிறது.
நேஷாவின் தொலைநோக்காவது உயர்தரத்திலான கறுவா உற்பத்திகளுடாக வர்த்தகநாமத்தை தரமுயர்த்தும் கவனத்துடன், எஸ்எம்எஸ் ஏற்றுமதிகளை உலகளாவியரீதியில் விஸ்தரித்தலாக விரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையின் தலைமையாக எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்சினை நிலைநிறுத்தும், புத்தாக்கமான பெறுமதிசேர் சலுகைகளை அவர் அறிமுகப்படுத்துவார்.
மேலதிகமாக, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பலமான பிணைப்புக்களை ஏற்படுத்தி, குழுமத்தின் அவுஸ்திரேலிய கரத்தை பலப்படுத்துவதற்கான துவக்கங்களையும் அவர் நிலைநிறுத்துவார்.
எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்சின் தாபகர்களான, ஷெஹான் செனவிரத்ன மற்றும் விபுலி செனவிரத்ன ஆகியோரது ஆசிகளுடன், அஷான் மற்றும் நேஷா ஆகியோர் தங்களது நிபுணத்துவத்தினை பங்களிக்கவும், புத்தாக்கத்தினை முற்கொண்டு செல்லவும், மற்றும் எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்சினை எதிர்பாரா உயரத்திற்கு இட்டுச்செல்லவும் தயாராகவிருக்கின்றனர். அவர்களது நியமனமானது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்ளவும் பூகோள பங்குடைமையினை வளப்படுத்தவுமான கம்பனியின் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது.
எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ் தனியார் லிமிட்டெட் குறித்து:
23 வருடங்களிற்கு முன்பு தாபிக்கப்பட்ட, எஸ்எம்எஸ் ஹோல்டிங்ஸ் தனியார் லிமிட்டெட்டானது தயாரிப்பு, நிலப்பரவல், பொழுதுபோக்கு, பெருந்தோட்டம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் என்பவற்றை உள்ளடக்கிய பன்முக ஆர்வங்களுடனான முன்னணி கூட்டுத்தாபனம் ஒன்றாகும். தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான செஹான் செனவிரத்னவின் தொலைநோக்குமிக்க தலைமைத்துவத்தின் கீழே, பல்வேறு தறைகளிலும் உன்னதத்தை வெளிப்படுத்தி, புத்தாக்கத்தினையும் அதனது எல்லை விரிவாக்கங்களையும் தொடர்கின்றது.
எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்சின் புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் (இடது) அஷான் செனவிரத்ன மற்றும் நேஷா செனவிரத்ன (வலது)
(இடமிருந்து வலமாக) அஷான் செனவிரத்ன, பணிப்பாளர் - எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ்,
ஷெஹான் செனவிரத்ன, முகாமைத்துவ பணிப்பாளர் - தலைவர் - எஸ்.எம்.எஸ்.
ஹோல்டிங்ஸ், நேஷா செனவிரத்ன, பணிப்பாளர் - எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ்.
அஷான் செனவிரத்ன - பணிப்பாளர், எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ்
நேஷா செனவிரத்ன - பணிப்பாளர், எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ்.
ஷெஹான் செனவிரத்ன - முகாமைத்துவ பணிப்பாளர் - தலைவர், எஸ்.எம்.எஸ். ஹோல்டிங்ஸ்,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM