வதி­வுள்ளோர் வெளி­நாட்டு நாண­யக் ­க­ணக்கு (RFC), வதி­வற்றோர் வெளி­நாட்டு (NRFC) நாண­யக்­க­ணக்கு தொடர்பில் இது வரை காலமும் இருந்த செலா­வணி கட்­டுப்­பாட்டுச் சட்­டத்தை நீக்க இலங்கை மத்­திய வங்கி தீர்­மா­னித்­துள்­ளது.

அதன்படி இக்­க­ணக்­கு­டைமை­யா­ளர்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தமது பணத்தை வெளி­நாட்டு நாண­ய­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். அத்­துடன், குறித்த வங்­கிக்கு பண மீளப்பெறுத்தல் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தல்­களை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை எனவும் மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது. இதன் மூலம் வர்த்­தக வங்­கி­களில் RFC/ NRFC கணக்கில் பணத்தை வைப்­பி­லிட்டு அதற்­கான வட்­டி­யுடன் அப்­ப­ணத்தை எவ்­வித தடையும் இன்றி மீண்டும் வெளி­நாட்டு நாண­ய­மாக எடுத்­துச்­செல்­லக்­கூ­டிய வாய்ப்பு உள்­ள­தா­கவும் மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான வர்த்­த­மா­னிய அறி­வித்தல் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளத­கவும் இத்­திட்­டத்தை எதிர்­வரும் சில நாட்­களில் நடை­மு­றைப் ­ப­டுத்­த­வு ள்­ள­தா­கவும் மத்­திய வங்கி மேலும் தெரி­வித்­துள்­ளது.

இதற்கு முன் வங்­கி­களில் RFC/NRFC கணக்­கு­டை­மை­யாளர் வெளி­நா­ட்­டுக்குப் பயணம் மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பத்தில் மாத்திரமே கணக்குகளில் உள்ள பணத்தை வெளிநாட்டு நாணயமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.