(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் என கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ , பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரின் பெயரை உயர்நீதிமன்றம் பெயரிட்டுள்ளது.
எனவே தவறை ஏற்றுக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் பதவி வகிப்பதால் எக்காரணிகளுக்காகவும் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாகாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியலமைப்பு பேரவை இன்றும் சகல பிரதிநிதித்துவத்துடன் முழுமையடையவில்லை.அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடம் உள்ளது. அரசியலமைப்பு சபை உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் இதுவரை அவருக்கான நியமனம் வழங்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் அதை சுட்டிக்காட்டியிருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என கூறும் அரசாங்கம் இந்த விடயத்தில் கூட எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதேவேளை நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் என கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை உயர்நீதிமன்றம் பெயரிட்டுள்ளது. எனவே தவறை ஏற்றுக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் இராஜிநாமா செய்ய வேண்டும்.
பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த அவர் தொடந்தும் மக்களின் சார்பாக பாராளுமன்றத்தில் இருப்பது தவறு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிப்பவர்களாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜிநாமா செய்வதே சிறந்தது.
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி தவறான விடயங்களையே குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் பதவி வகிப்பதால் எக்காரணிகளுக்காகவும் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாகாது. ஆகவே அரசியலமைப்பு பேரவை சட்டசபையுடன் அதிகார சமநிலையுடன் செயற்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM