ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் த்ரிஷா?

22 Nov, 2023 | 09:23 PM
image

தமிழ் திரையுலகில்  20  வருடங்களுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா, குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்னொரு பக்கம் த்ரிஷா 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள மாஸ் நடிகர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ’ படத்தில் நடித்த நிலையில், தற்போது அவர் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக் லைப்’ படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

அதுமட்டுமின்றி ஹிந்தியில் மீண்டும் கவனம் செலுத்த த்ரிஷா முடிவு செய்திருக்கிறாராம். அந்தவகையில் சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் கண்டிப்பாக அந்தப் படத்தை த்ரிஷா ஒத்துக்கொள்வார் என்றும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. 

ஏற்கனவே திரிவிக்ரம் இயக்கிய மகேஷ் பாபு நடிப்பில் ’அதோடு’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

2014 இல் வெளியான சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்த குறும்படமான 'I am the change' இல் தோன்றிய பிறகு, த்ரிஷாவின் முதல் கூட்டணி இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right