(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு 2820 மில்லியன் ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு அதிக நிதி ஒதுக்குவது சிறந்த எடுத்துக்காட்டல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2022,2023 ஆகிய காலப்பகுதிகளில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு 3788 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட நிதி ஒதுக்கீடு அடுத்த ஆண்டுக்கு 6608 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு 2820 மில்லியன் ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு அதிக நிதி ஒதுக்குவது சிறந்த எடுத்துக்காட்டல்ல,
1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது இந்தியாவின் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ,அப்போயை இந்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோர் அரச செலவுகளை குறைத்து பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள். அரச செலவுகளை குறைத்து மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டார்கள். சிறந்த தீர்மானங்களை செயற்படுத்தினதால் தான் இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளில் 95 சதவீதமானவை செயற்படுத்தப்படவில்லை. செயற்படுத்தாத அந்த முன்மொழிவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 40 இலட்சமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 70 சதவீதமானோருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை. பெருந்தோட்ட துறை பகுதியில் ஏழ்மை நிலை 51 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்விதமான தீர்வினையும் இந்த வரவு செலவுத் திட்டம் வழங்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM