இன்றைய கால கட்டத்தில் குதிகால் வலி என்பது பாதத்தை பாதிக்கும் பொதுவான பிரச்சினையாகும். இது பொதுவாக முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதுவும் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்றில்லை. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
இது பொதுவாக நடைபயிற்சி, நின்று அல்லது இயங்கும் எந்தவொரு செயலையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் உங்கள் பாதங்கள் தான் உடலின் மொத்த எடையின் அழுத்தத்தைத் தாங்குகின்றன. எனவே விளையாடும் போதும் கடினமான தரைகளில் உங்கள் பாதங்கள் தாறுமாறாக அழுத்தி நடப்பதால் அல்லது தவறான காலணிகளை அணிவதனாலும் சில சமயங்களில் குதிகால் வலியை உருவாக்கலாம்.
எனவே குதிபாகத்தில் கூடுதல் பஞ்சு மற்றும் பாத வளைவுகளை தாங்கிப் பிடிக்கும் வகையான காலணிகள் அணிவது மிகுந்த பலன் கொடுக்கும். “Micro Cellular Rubber" செருப்புகளை அணிந்து நடப்பது நல்லது.
குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும்.
மேலும், குதிகால் எலும்பிலிருந்து 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் குதிகால் வலி வரும். சிலருக்குக் குதிகால் பகுதியில் சிறிதளவு எலும்பு வளரக்கூடும் இதை 'கால்கேனியல்ஸ்பர்' (Calcaneal Spur) என அழைப்பர். இதனாலும் குதிகால் வலி ஏற்படலாம்.
குதிகால் வலியின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணித்துவிட்டு அது ஏற்படுத்திய செயல்களைத் தொடர்ந்து செய்து மூலம் அது மோசமாகி நீண்டகால பிரச்சினையாக மாறிவிடும். மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே உங்களால் முடிந்தவரை வலியிலிருந்து விடுபட சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடுங்கள்.
- கோபி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM