க.பொ.த. சாதாரண தர பரீட்சை 10 ஆம் தரத்தில் நடத்த நடவடிக்கை - கல்வி அமைச்சர்

Published By: Vishnu

22 Nov, 2023 | 09:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பதினோராம் தரத்தில் தற்போது நடத்தப்படும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை 10ஆம்  தரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

மாணவர்களின் கல்வி கற்பதற்கான வயதைக் கருத்திற்கொண்டு அவர்கள் 15 வயதாகும் போது கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் 4 வயது நிறைவடைந்த சிறார்கள் ஆரம்ப பாடசாலை செல்வது  கட்டாயமாக்கப்படும் என  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, மொகமட் முஸம்மில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலவச ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்கு  நாம் உத்தேசித்துள்ளோம். அந்த வகையில் நான்கு வயதை நிறைவு செய்யும் சிறார்கள் கண்டிப்பாக ஆரம்ப பாடசாலை செல்வது அவசியம். நாட்டில் 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட நான்காயிரம் பாடசாலைகள் உள்ளன.  100 மாணவர்களுக்கு குறைந்த 2900 பாடசாலைகள் காணப்படுகின்றன.

அதனால் மிக இலகுவாக கிராமிய மட்டத்தில் இலவசமாக ஆரம்ப பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் இடமளிக்க முடியும். அதற்கான வேலைத் திட்டம் ஒன்றை தேசிய கல்வி நிறுவனம் தயாரித்துள்ளது. 

அதனை அறிமுகப்படுத்துவதோடு சாதாரண தர பரீட்சையை பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

நான்காம் ஆண்டிலிருந்து மாணவர் ஒருவர் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுக்கும் போது 15 ஆவது வயதில் அவர் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியும். அத்துடன் 17 வயதில் கல்வி பொதுத் தராத உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் , அது சம்பந்தமான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42
news-image

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2025-03-26 15:01:21
news-image

மோட்டார் சைக்கிள் - பாரஊர்தி மோதி...

2025-03-26 14:32:17