(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், 'மலையக பாதுகாப்பு' மற்றும் 'மனிதஉரிமைகள்' உட்பட மூன்று ஒன்றியங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று புதன்கிழமை (22) சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கீழ்வரும் விடயங்களுக்காக மூன்று பாராளுமன்ற ஒன்றியங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை உருவாக்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார மற்றும் முறையாக 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைய 'மலையகப் பாதுகாப்பு' மற்றும் 'மனித உரிமைகள்' தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியங்கள் இரண்டை ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் சபைக்கு அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM