எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு
கைத்தொழில் புரட்சி அதன் பின்னர் உலகமயமாதல் மற்றும் கணனியின் வருகை இதன் பிற்பாடு இணையத்தின் பயன்பாடு வெகுவாக ஆரம்பித்தது. இணையம் அனைத்து துறைகளிலும் கால் பதித்த பின்னர் முழு உலகமும் கிராமமாக சுருங்கியது. இது இவ்வாறிருக்க செயற்திறன் அலைபேசியின் பாவனை நடைமுறைக்கு வந்தது. இவை யாவுமே மனிதர்களுடைய வேலைகளைத் தகவல் தொழினுட்பத்தினூடாக இலகுவாக்கியது. செயற்கை நுண்ணறிவு சார் விடயங்கள் இவற்றில் ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டுக் கொண்டே வந்தது.
செயற்கை நுண்ணறிவு எப்படி செயற்படுகிறது என்பதே முக்கியமான விடயமாகும். 2023 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுக்கான ஓர் ஆண்டாக இருக்கும் என்பதனை முன்பே கணித்திருந்தார்கள். முன்னொரு காலத்தில் நாம் கணினிக்கு என்னென்ன விடயங்களை வழங்குகிறோமோ அவற்றை தரவுகளாக எடுத்து வைத்துக் கொண்டு நாம் கொடுத்ததை அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் செயற்பாடு இவ்வளவு காலமும் இருந்தது. நாம் கொடுக்கும் தகவல்களை வைத்து ஒரு இயந்திரம் தானே முடிவுகளை எடுக்கும் நடைமுறையே செயற்கை நுண்ணறிவு எனக் கொள்ளலாம்.
கணனிமயப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் மூலம் தற்போது சகல துறைசார் தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது. இந்தத் தகவல்கள் ஒரு மனிதன் எவ்வாறு கல்வியின் மூலமாக அறிவைப் பெற்றுக் கொண்டு சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் முடிவுகளை எடுக்கிறானோ அதே போன்று செயற்கை நுண்ணறிவு தனது வேலையைச் செய்கின்றது.
உலகம் முழுவதும் கொடுக்கப்பட்டிருக்கின்ற அத்தனை ஆவணப்படுத்தல்களையும் அறிவூட்டல்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு அதற்குரிய தொழில்நுட்பத் திறனை வைத்து முடிவுகளைத் தானே எடுக்கின்றது. சமீபகாலமாக அதிகளவானோர் பாவிக்கும்chatGPT AI இனைப் பாவித்து நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை அள்ளி வழங்கி கொண்டிருக்கிறது. கூகுள்தேடல் பொறி எமக்கு வழங்குவது போலல்லாமல் எமது கேள்விக்கேற்ற சரியான பதிலை ஆங்காங்கே தேடியெடுத்து பதிலை உருவாக்கித் தருகின்றது. இவ் உருவாக்கும் சிறப்பான தன்மையினைத் தான் செயற்கை நுண்ணறிவுத் திறன் என்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு இன்று பல்வேறு துறைகளில் பாரிய பங்களிப்பினை அளித்து வருகின்றது. உற்பத்தித் துறைகளிலும் அறிவுசார் துறைகளிலும் மனிதனுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக உதவுகின்றது. மனிதர்கள் தேடி எடுப்பதாயின் பல மணி நேரங்கள் ஆகும் வேலையைச் சொற்ப நேரத்தில் தேவையான விடயத்தை தேவையான முறையில் எடுத்து அதனை எமக்கேற்ற முறையில் தருகின்றது. செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திர அறிவூட்டல் ((machine learning) மற்றும் ஆழமான அறிவூட்டல் (deep learning என்ற வகையில் நடைபெறுகின்றது.
ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான ஊழியரைப் போல் பயன்படுத்த தக்கதாக செயற்கை நுண்ணறிவு மாறி இருக்கின்றது. யுத்தத்திற்கு மருத்துவத்திற்கு போக்குவரத்திற்கு இன்னும் பலவற்றுக்கு AI தொழில்நுட்பம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக உளவு விமானங்கள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆளில்லா உளவு விமானங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் மனிதன் இதனை எங்கோ இருந்து இயக்கிக் கொண்டிருக்க வேண்டும். எதிரிகள் அவ் உளவு விமானத்தை தாக்காமல் இருப்பதற்காக இத்தனை உயரத்தில் பறக்க வேண்டும் என்பதற்கு மனிதன் வேறிடத்தில் இருந்து கண்காணித்து இயக்க வேண்டிய தேவையிருந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ன செய்கின்றது என்றால் இந்த இயக்கத்தை தானே செய்கின்றது. இவ் உளவு விமானம் பறக்கும் போது எதிரி விமானம் வந்தால் எவ்வாறு தாழவோ உயரவோ பறக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றது. கிட்டத்தட்ட மனிதனைப் போலவே சிந்திக்கும் ஆற்றல் கொண்டதாய் இச்செயற்கை நுண்ணறிவு செயற்படுகின்றது.
நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடன் மட்டும் இது நின்று விடப் போவதில்லை. அனைத்துத் துறைகளிலும் புதிய புதிய புரட்சிகளைக் கண்டு பிடிப்பதற்கு புதிய தேடல்களையும் மாற்றங்களையும் அடுத்த சந்ததியினருக்குக் கடத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு பயன்படப் போகின்றது. ஒரு மனிதன் தனக்குத் தேவையான ஓர் விடயத்தை எழுத்து வடிவில் தரச்சொல்லி செயற்கை நுண்ணறிவு விசைப்பலகையிடம் கேட்டால் போதுமானதாக இருக்கின்றது. மனிதனுக்கு அறிவூட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அது இருக்கிறதென்றால் மிகையில்லை.
"எந்திரன்" திரைப்படம் வந்த போது ஓர் இயந்திர மனிதனுக்கு உணர்ச்சிகள் வந்து விட்டால் என்னாகும் எனப் பார்த்தோம். அதே போல் இங்கு உணர்வுகள் என்பது மட்டும் வராத அளவுக்குத் தான் உள்ளது ஆயினும் அறிவு வந்து விட்டது. இவ் உலகிலே விலங்குகளை விட மனிதனுக்கு உச்சமாக இருக்கக் கூடியதாய் ஆறாம் அறிவைப் பார்க்கிறோம். பகுத்தறிதல் சிந்தித்து செயற்படுதல் மனிதனை ஏனைய ஜீவராசிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களில் இருந்து AIதொழில்நுட்பத்தை வேறுபடுத்திக் காட்டுவதாய் பரிணமித்திருக்கின்றது.
எப்படி இத்தனை காலமும் இயந்திரங்கள் நாங்கள் கொடுத்த தகவல்களை வைத்துக் கொண்டு திரும்பிக் கொடுத்ததோ அதனை முற்றுமுழுதாக மாற்றி தான் தகவலை வைத்துக் கொண்டு எனக்கு என்ன தேவையென்பதை உணர்ந்து மாற்றியமைத்து மிகவும் அழகாகத் தருகின்றது.
ஓர் நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் செயற்கை நுண்ணறிவினால் சில பாதகங்களும் உண்டு.
AI படைப்பாற்றல் இல்லாமை. கணனிக் குறியீடு முதல் காட்சிக் கலை வரை அனைத்தையும் உருவாக்கும் பணியை யுஐ பெற்றிருந்தாலும் அதற்கு அசல் சிந்தனை இல்லை.
AI மனிதர்களின் திறன் இழப்பு ஏற்பட்டுக் கொண்டே போகும்.
AI தொழில்நுட்பத்தின் மீது சாத்தியமான அதிகப்படியான நம்பிக்கையால் மனிதர்களுக்கு சோம்பல் தன்மை அதிகரிக்கும்.
AI மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுதல்.
AI யுஐ தொழில்நுட்பங்கள் பெருகிய முறையில் அதிநவீனமாகி வருவதால் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய பாதுகாப்பு இரகசியங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன.
AI மனிதர்களிடையேயான தொடர்புகள் மிகப் பாரியளவில் குறைந்து போகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எது எவ்வாறிருப்பினும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மாபெரும் தாக்கத்தையும் ஆட்சியையும் செய்யப் போவது உறுதியாகும்.
-சுவர்ணலதா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM