கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு  மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை  விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் (23,02) 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் உதவி பொருட்களை வழங்கும் விதமாகவும் போராட்டக்களத்துக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் இன்றைய தினம் வருகைதந்திருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.